தற்போதைய செய்திகள்

விருதுநகர்-திண்டுக்கல் இடையே புதிய மின்பாதையில் சரக்கு ரயில் தொடக்கம்

விருதுநகருக்கும்-திண்டுக்கல்லுக்கும் இடையே 105 கி.மீ தூரம் உள்ளது. இந்த வழித்தடத்தில் மின்பாதை அமைக்கும் பணிகள் 2010ல் தொடங்கி முடிந்துள்ளது. அதையடுத்து இப்பாதையில் ரயில்வே துறையின்

முன்றுறையரையனார்

விருதுநகரில் இருந்து திண்டுக்கல்லுக்கு புதிய மின்மயமாக்கப்பட்ட பாதையில் சரக்கு ரயில் போக்குவரத்தை புதன்கிழமை மாலையில் ரயில்வே அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். 

    விருதுநகருக்கும்-திண்டுக்கல்லுக்கும் இடையே 105 கி.மீ தூரம் உள்ளது. இந்த வழித்தடத்தில் மின்பாதை அமைக்கும் பணிகள் 2010ல் தொடங்கி முடிந்துள்ளது. அதையடுத்து இப்பாதையில் ரயில்வே துறையின் பாதுகாப்பு ஆணையாளர் சதீஸ்குமார் மித்தல் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் ஆய்வு செய்தனர்.

    அதையடுத்து, முதல் கட்டமாக ஆய்வுப்பணிகள் முடிந்து இன்ஜின் சோதனை ஓட்டம் விடப்பட்டது. அதில் புதிய மின்பாதை வழித்தடப்பணிகள் அனைத்தும் திருப்தியாகவே இருப்பதாக தென்னக ரயில்வேயின் பாதுகாப்பு துறை ஆணையாளர் சதீஸ்குமார் மித்தல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து விருதுநகர் ரயில் நிலையத்திற்கு மாலை 6.50 மணிக்கு ரயில் இன்ஜின் வந்தது. இதில் மதுரை கோட்ட சிக்னல் பொறியாளர், ரயில்வே இளம் மின் மின்பாதை பொறியாளர் உள்ளிட்டோர் வந்தனர். 

   இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு புதிய மின்பாதையில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்குகிறது. இப்பாதையில் இன்ஜினுடன் 3700 டன் சரக்குகள் ஏற்றப்பட்ட பெட்டிகள் 80 கீ.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இதேபோல், தொடர்ந்து சரக்கு ரயில் ஒரு மாதத்திற்கு இயக்கப்படும்.

   அதையடுத்து, ரயில் பாதையில் மின்வழித்தடங்கள் சரியாக உள்ளதா எனவும், இடை நிறுத்தம் இல்லாமல் இழுத்துச் செல்கிறதா என ஆய்வு செய்யப்படும். அதன் பின்னரே தென்னக ரயில்வே பாதுகாப்பு துறை ஆணையாளருக்கு அறிக்கை அனுப்பப்படும். இதையடுத்து மின்சார பயணிகள் ரயில் விடுவது குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT