தற்போதைய செய்திகள்

வணிகவரித்துறையில் புதிய இணைப்புப் படிவத்தை திரும்பப்பெற  கோரிக்கை

வணிகவரித்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைப்பு படிவம் ஐ-யை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில்வணிகச்

ஜெபலின்ஜான்

வணிகவரித்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைப்பு படிவம் ஐ-யை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில்வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இக்கூட்டமைப்பின் தலைவர் என.சிவநேசன், பொதுச்செயலர் வி.கே.ராஜமாணிக்கம் ஆகியோர் திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனு விவரம்:

    வணிகவரித்துறை நாளிட்ட அரசாணை எண் 137ன்படி, ஒவ்வொரு மாதமும் படிவம் ஐ ல் மாதாந்திர விபரம் கொடுப்பவர்கள் புதிய இணைப்பு ஏ படிவத்தில் மாத இறுதி இருப்புச்சரக்கு விபரத்தையும், அவற்றின் மதிப்பையும் குறிப்பிட வேண்டும் என்ற சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 ஒவ்வொரு மாத இறுதியிலும் இருப்புச் சரக்கு விபரங்களை சரக்குவாரியாக இந்த இணைப்புப் படிவத்தில் வணிகர்கள் குறிப்பிடுவது மிகவும் சிரமம். வணிகர்களுக்குத் தேவையற்ற வேலைப்பளுவாக இது உள்ளது.

 அதிலும் குறிப்பாக சில்லரை வணிகம் செய்பவர்கள் மாத இறுதி நாளில் இரவு வரை தங்கள் விற்பனையை முடித்த பிறகு சுமார் 300 முதல் 500 வகையான சரக்குகளில் எவ்வளவு இருப்பு சரக்கு இருக்கிறது என்று மறுநாள் மாதத் தொடக் நாளன்று காலை விற்பனையை தொடங்குவதற்கு முன்பு கணக்கெடுப்பது என்பது சற்றும் இயலாத காரியம்.

 சில நிறுவனங்களில் இருப்புச்சரக்கு விபரம் எடுப்பதற்கு மூன்று நாட்கள் கூட ஆகும்.மேலும் இப்படிவத்தில் இருப்புச்சரக்கின் மதிப்பு விபரமும் ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது நடைமுறைப்படுத்த முடியாத ஒரு சட்ட விதியாகும்.

   ஒரு குறிப்பிட்ட சரக்கு மாதத்தின் பல்வேறு நாள்களில் வெவ்வேறு விலையில் வாங்கியது இருப்புச்சரக்காக இருக்கும். அதில் எந்த விலைக்கு வாங்கிய சரக்கு எவ்வளவு இருப்புச்சரக்காக இருக்கும் என்றும் யாராலும் சொல்ல முடியாது. இச்சூழலில் அதற்கு எப்படி மதிப்பு போட முடியும் அதுவும் தயாரிப்புத்துறையில் உள்ளவர்கள் தங்களது கச்சாப்பொருளை பல்வேறு உற்பத்தி நிலையில் வைத்திருப்பதை எப்படி மதிப்பீடு செய்ய முடியும்.

   படிவம் ஐ-ல் மாதாந்திர விபரம் கொடுக்க வேண்டிய, கணினி வைக்க முடியாத சாதாரண வணிகர்களும் இந்தக்கூடுதல் விபரங்களைக் கொடுக்க வேண்டும் என்பது பெரும் சுமையாகும். கணினி வைத்திருக்கும் பெரிய வணிகர்களும்கூட இருப்புச்சரக்கிற்கு ஒவ்வொரு மாதமும் மதிப்பீடு செய்ய முடியாது. வருமான வரிச்சட்டத்தின்படி லாபத்தைக் கணக்கிடத்தான் ஆண்டு இறுதியில் மட்டும் இருப்புச்சரக்கு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். வணிகவரித்துறைக்கு இந்த விபரம் தேவையற்றது.

 எனவே இந்தப்புதிய இணைப்புப் படிவம் ஐ-யை உடனடியாக திரும்பப்பெற பெற வணிகவரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT