தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே அரசு கார் மோதி ஓட்டல் உரிமையாளர் சாவு

விருதுநகர் 4 வழிச்சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் பிரிவு சர்வீஸ் சாலை மீது ஓட்டல் நடத்தி வருபவர் ரத்தினம்(60). இவர் வியாழக்கிழமை புதிய பேருந்து நிலையம் சென்று திரும்பி

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அரசு கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஓட்டல் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழ்ந்தார்.

விருதுநகர் 4 வழிச்சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் பிரிவு சர்வீஸ் சாலை மீது ஓட்டல் நடத்தி வருபவர் ரத்தினம்(60). இவர் வியாழக்கிழமை புதிய பேருந்து நிலையம் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியாக எதிரே வேளாண்மைத் துறைக்கு சொந்தமான கார் எதிர்பாரதவிதமாக மோதியது. இதில், ரத்தினம் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்தார்.

இது குறித்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீஸார் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகி்ச்சைக்கு கொண்டு செல்லும் போது இடையிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு வேளாண்மை துறை கார் டிரைவர் நாகஜோதி(56) என்பவர் மீது விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT