முகப்பு
தற்போதைய செய்திகள்

பாஜக சார்பில் இரும்பு சேகரிக்கும் பணி

குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 7 ஆயிரம் டன் எடையில் 183 மீட்டர் உயரத்தில் இரும்பிலான சிலை அமைப்பதற்கு அம்மாநில முதல்வர் மோடி பணிகள் மேற்கொண்டுள்ளார்.  இதற்காக

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

பழனி ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் இரும்பு சேகரிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 7 ஆயிரம் டன் எடையில் 183 மீட்டர் உயரத்தில் இரும்பிலான சிலை அமைப்பதற்கு அம்மாநில முதல்வர் மோடி பணிகள் மேற்கொண்டுள்ளார்.  இதற்காக தாமரை என்ற தலைப்பில் அகில இந்திய அளவில் கிராமம் தோறும் இரும்பு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  பழனி ஒன்றியம் சார்பில்இரும்பு சேகரிக்கும் பணி அ.கலையமுத்தூர், கரடிகூட்டம், அமரபூண்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி, வத்தக்கவுண்டன்வலசு, உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது.

சிவகிரிப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநில துணைத் தலைவர் திருமலைசாமி தலைமை வகித்தார். விவசாய சங்க தலைவர் கருப்புச்சாமி ஏர் உழுத கொழுவை தலைவரிடம் வழங்கினார்.  நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, கோதை உதயகுமார், கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.