மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வி இறுதிச் சடங்கு
உடல்நலக்குறைவால் உயிரிழந்த மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வியின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை கருவடிக்குப்பம் இடுகாட்டில் நடைபெற்றது.
உடல்நலக்குறைவால் உயிரிழந்த மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வியின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை கருவடிக்குப்பம் இடுகாட்டில் நடைபெற்றது.
கடந்த 17-ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கலைச்செல்வி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.அவரது உடல் தில்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கார் மூலம் புதுவைக்கு இரவு எடுத்து வரபப்பட்டது. துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் ஜிகே.வாசன்,
திமுக பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., புதுவை எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம், உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.சனிக்கிழமை காலை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் சனிக்கிழமை அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமியின் இல்லத்தில் இருந்து அவரது மனைவி கலைச்செல்வியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கருவடிக்குப்பத்தில் உள்ள இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
முதல்வர் ரங்கசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏவி.சுப்பிரமணியம், எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.