முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகையில் 2-வது நாளாக மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம்: 16 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி

நாகையில் 2-வது நாளாக தொடர்கிறது மீனவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம். போராட்டத்தில் பங்கேற்ற 16 பெண்கள் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அரசு

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

நாகையில் 2-வது நாளாக தொடர்கிறது மீனவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம். போராட்டத்தில் பங்கேற்ற 16 பெண்கள் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களின் விசைப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை தலைமை அஞ்சலகம் முன்பாக மீனவர்கள் சனிக்கிழமை காலவரையற்ற தொடர் உண்ணாவிதரப் போராட்டத்தைத் தொடங்கினர்.நாகை வட்டத்துக்குள்பட்ட 8 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், மீனவப் பெண்கள் மற்றும் நாகை, காரைக்கால் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

சனிக்கிழமை காலை தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம், 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையன்றும் தொடர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரத்தில், போராட்டத்தில் பங்கேற்றிருந்த பெண்களில் 16 பேர் திடீரென மயமக்கமடைந்து சரிந்தனர்.இதையடுத்து, அந்த 16 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்துத் தகவலறிந்த மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால், உடனடியாக நாகை அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →