தற்போதைய செய்திகள்

அறிவித்த திட்டங்களை முதல்வர் முழுமையாக செயல்படுத்தி வருகிறார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை தாலிக்கு தங்கம் விழா நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு

எஸ். பாண்டியன்

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பொதுமக்களுக்காக அறிவித்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆர்.பி.உயகுமார் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை தாலிக்கு தங்கம் விழா நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், பொதுமக்கள் பணி செய்யும் வகையில் மீண்டும் முதல்வர் என்னை அமைச்சராக நியமித்துள்ளார். அவ்வகையில் நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக தமிழக மக்களுக்கு முதல்வர் செயல்படுத்தியுள்ளார். இளம் பெண்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மேலும், ஏழை எளிய பெண்களின் திருமணத்திற்காக உதவித் தொகையையும் வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் 10-வது படித்த பெண்களின் திருமணத்திற்காக 129 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கமும், 4 கிராம தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பட்டதாரி மற்றும் பட்டயம் பெற்ற 31 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும், 4 கிராம் தங்கமும் தொலைநோக்கு திட்டத்துடன் திருமண நிதியுதவியாக மொத்தம் ரூ.66.37 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னோடியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் பேசுகையில், பொதுமக்கள் பயனடையும் வகையில் விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளையும், ஏழை பெண்கள் தங்களின் வாழ்வாதரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளையும் முதல்வர் வழங்கி வருகிறார். பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 13 அம்ச திட்டங்களையும், அடிப்படை வசதிகளான சாலை, குடிநீ்ர் வசதி திட்டங்களும் பொதுமக்களுக்காக செய்து கொடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக 160 பேருக்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கத்தையும் அமைச்சர்கள் வழங்கினார்கள். இதில், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கொங்கன், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தா, துணைத்தலைவர் சுப்பிரமணியம், நகராட்சி தலைவர் சாந்தி, ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி உள்ளி்ட்ட பலர் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT