78-வது தேசிய சீனியர் பேட்மிண்டன்: பி.வி. சிந்து சாம்பியன்
78 ஆவது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் புது தில்லியில் நடைபெற்றுவந்ததது. மகளிர் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.
78 ஆவது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் புது தில்லியில் கடந்த 16 ஆம் தேதி முதல் இன்று வரை(23) நடைபெற்றது.. மகளிர் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து, அருந்ததியை எதிர்கொண்டார்.
அதில் 21-17, 21-14 என்ற நேர் செட்களில் சிந்து வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றோரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான கோகலேவை தோற்கடித்து, ரித்துபர்னா தாஸ் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.
இதனையடுத்து இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ரித்துபர்னாதாஸை 21-11,21-17 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.