காங்கிரஸில் வன்னியர்கள் புறக்கணிப்பு: வன்னியர் சங்கம் குற்றச்சாட்டு
தமிழக காங்கிரஸ் புதிய நிர்வாகிகளில் வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக வன்னிய சத்திரியர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.
தமிழக காங்கிரஸ் புதிய நிர்வாகிகளில் வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக வன்னிய சத்திரியர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.
இச்சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.அதில் பேசிய சங்கத்தின் நிர்வாகிகள் எம். முத்தழகன், சி.ஆர். சூரியன் ஆகியோர், 1952-ல் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் ராமசாமி படையாச்சியார் தலைமையிலான கட்சியின் ஆதரவோடு தான் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், காங்கிரஸ் புதிய மாநில நிர்வாகிகளில் ஒரு சில வன்னியர்களுக்கு மட்டும இடம் கிடைத்துள்ளது. இதுபோன்ற நிலை தொடர்ந்தால் வன்னியர்கள் காங்கிரûஸ புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என்றனர்.
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், வன்னியர் நல வாரியத்தை உடனே செயல்படுத்தி பல ஆயிரம் கோடி வன்னியர் சொத்துக்களை ஒருங்கிணைக்க வேண்டும், அனைத்து பொதுத்துறைகளிலும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் வன்னிய சத்திரியர் சங்க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
Advertisement