முகப்பு
தற்போதைய செய்திகள்

அகில இந்திய பல்கலைக்கு இடையேயான பூப்பந்து போட்டி: அண்ணாமலைப் பல்கலை அணி 2-ம் இடம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பல்கலைக்கு இடையேயான பூப்பந்து போட்டி டிச.20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் இருந்து நூற்றுக்கும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

 அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பூப்பந்து போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி 2-ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பல்கலைக்கு இடையேயான பூப்பந்து போட்டி டிச.20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதிப்போட்டியில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்துடன் மோதிய அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெற்றி பெற்று 2-ம் இடத்தை பிடித்தது.

வெற்றி பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி வீரர்களை புதன்கிழமை பல்கலைக்கழக நிர்வாகக்கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ், பதிவாளர் என்.பஞ்சநதம் ஆகியோர் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் உடற்கல்வித்துறை இயக்குநரும், கல்விப்புல முதல்வரும் ஜி.ரவீந்தரன், அணி மேலாளர் உதவிப் பேராசிரியர் ரா.சரவணன், பயிற்சியாளர்கள் மு.முரளிகிருஷ்ணா, கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments