முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே குடிபோதையில் தகராறு: கணவன், மனைவி சாவு

விருதுநகர் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த மனைவி விஷம் குடித்து உயிரிழந்தார். இதனால் மனம் உடைந்த கணவரும் சிறிது நேரத்திலேயே

Updated On : 26 டிசம்பர், 2013 at 3:31 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:57 AM

விருதுநகர் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த மனைவி விஷம் குடித்து உயிரிழந்தார். இதனால் மனம் உடைந்த கணவரும் சிறிது நேரத்திலேயே விஷம் குடித்து இறந்தார்.

    விருதுநகர் அருகே அல்லம்பட்டி அனுமான் நகரைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி(45). இவர் இப்பகுதியில் தீப்பெட்டி ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளியான இவரது கணவர் பால்பாண்டி(48). இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே நாள்தோறும் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தாராம். அதேபோல், புதன்கிழமை இரவு குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டராம்.

 இதனால் ஆத்திரம் அடைந்த முருகேஸ்வரி பயிர்களுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்தை பூச்சி மருந்தை அருந்தினாராம். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பால்பாண்டியும் பூச்சி மருந்தை எடுத்து குடித்தராம்.

Advertisement

     இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததை அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் பார்த்து இரவு 11 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நடுராத்திரியில் உயிரிழந்தனர். இது தொடர்பாக அவரது உறவினர் விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

 குடிபோதையில் தகராறு செய்த தந்தை கழுத்தறுத்து கொலை: விருதுநகர் அருகே முத்தாள்நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(50). இவருக்கு மனைவி பாப்பா, மகன் முனியாண்டி மற்றும் மகள் முனீஸ்வரி ஆகியோர் உள்ளனர். இவரது மகள் முனீஸ்வரி காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இதற்கு காரணம் மனைவியும், மகனும் தான் எனக் கூறி குடிபோதையில் புதன்கிழமை இரவு தகராறு செய்தராம். அதோடு, மனைவி பாப்பாவையும் அடித்து உதைத்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த மகள், மகன் முனியாண்டி ஆகியோர் கீழே தள்ளியுள்ளார். பின்னர் மகன் முனியாண்டி பிளேடால் தந்தையின் கழுத்தறுத்துள்ளார். இதனால் கழுத்துப் பகுதியில் காயம் அடைந்து உயிரிழந்தாராம்.

     இதை அக்கம் பக்க்தில் உள்ளவர்கள் பார்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து விரைந்து வந்த பாண்டியன் நகர் போலீஸார் சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக அவரது மனைவி பாப்பா, மகன் முனியாண்டி ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.