சிதம்பரம் அருகே கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை இராணுவத்தினர் கைது செய்துள்ள நாகை மீனவர்களை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு விடுவிக்கக் கோரியும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 70-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை மீட்கக் கோரியும் கடலூர் மாவட்ட மீன் பிடி தொழிலாளரக்ள் சங்கம் சார்பில் பரங்கிப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதமபரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் ஜி.பாஸ்கரன், சி.ஐ.டி.யூ மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, விவசாயிகள் சங்க பி.கற்பனைச்செல்வம், தொழிற்சங்க நிர்வாகிகள் என்.ஜெயசீலன், ஆர்.கருணைச்செல்வம், பி.குப்புசாமி மற்றும் சாமியார்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பெரியகுப்பம், ரெட்டியார்பேட்டை, மடவாப்பள்ளம், குமாரப்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், இந்திராநகர், புதுப்பேட்டை, சின்னூர் வடக்கு, சின்னூர் தெற்கு ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஊர் பிரமுகர்கள் பங்கேற்றனர்.