லால்குடி சப்தரிஷீஷ்வரர் கோயிலில் தீ: ரூ.5 லட்சம் மதிப்பில் நாசம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சப்த ரிஷீஷ்வரர் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ரூ.5 லட்சம் மதிப்புள்ள அலங்காரப் பொருள்கள், புடவைகள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. சுமார் 2 மணி
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சப்த ரிஷீஷ்வரர் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ரூ.5 லட்சம் மதிப்புள்ள அலங்காரப் பொருள்கள், புடவைகள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. சுமார் 2 மணி நேரம் போராடி மீட்புக் குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை.
இதில், மதில் சுவர், சந்நிதி சுவர்களும் சேதமடைந்தன. விநாயகர் சந்நிதி அருகே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.