தற்போதைய செய்திகள்

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது 3 பழங்கால கற்சிலைகள் கண்டெடுப்பு

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் கடலோர கிராமமான காட்டுப்பள்ளியில் புதிதாக வீடு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கட்டுமானப்

தினமணி

காட்டுப்பள்ளி கிராமத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது சிவலிங்கம் உள்ளிட்ட மூன்று பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் கடலோர கிராமமான காட்டுப்பள்ளியில் புதிதாக வீடு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கட்டுமானப் பணிக்காக  நேற்று(வியாழக்கிழமை) பள்ளம் தோண்டிய போது வித்தியாசமாக சத்தம் கேட்டுள்ளது.இதையடுத்து அங்கு தோண்டிப் பார்த்த போது சிவலிங்கம், அம்மன் சிலை, மற்றும் சண்டிகேஸ்வரர் சிலை என மூன்று பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துச் சென்று சிலைகளை பார்வையிட்டனர்.பின்னர் இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அகில இந்திய பல்கலை. வாலிபால்: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் சாம்பியன்

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து வாக்காளா்கள் பட்டியலில் இணையலாம்

குருகிராம்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய கட்டடப் பொருள் விநியோகஸ்தா்

SCROLL FOR NEXT