முகப்பு
தற்போதைய செய்திகள்

விடுதியில் தண்ணீர் வசதி கோரி பல்கலை. மாணவியர்கள் முற்றுகை போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தாமரை இல்லத்தில் சுமார் 2 ஆயிரம் மாணவியர்கள் தங்கியுள்ளனர். இவ்விடுதியில் கடந்த சில தினங்களாக தண்ணீர் இல்லாமல் மாணவியர்கள் அவதியுற்று வந்துள்ளனர். இந்நிலையில் தண்ணீர் வசதி கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர்கள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:18 AM
பகிர்:

விடுதியில் தண்ணீர் வசதி கோரி அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவியர்கள் துணைவேந்தர் வீடு முன்பு முற்றுகை போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தாமரை இல்லத்தில் சுமார் 2 ஆயிரம் மாணவியர்கள் தங்கியுள்ளனர். இவ்விடுதியில் கடந்த சில தினங்களாக தண்ணீர் இல்லாமல் மாணவியர்கள் அவதியுற்று வந்துள்ளனர். இந்நிலையில் தண்ணீர் வசதி கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர்கள் விடுதியிலிருந்து ஊர்வலமாக சென்று துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் வீடு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துணைவேந்தர் வீடு செல்லும் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

பின்னர் பல்கலைக்கழக துறைத்தலைவர்கள் ஆர்.எம்.கதிரேசன் (வேளாண்மை), டாக்டர் என்.சிதம்பரம் (மருத்துவம்), ரவிடேவிட்ஆஸ்டின் (பல்மருத்துவம்), செல்வராஜ் (கலை), வேலுசாமி (பொறியியல்) உள்ளிட்டோர் அங்கு சென்று மாணவியர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி லாரி மூலம் உடனடியாக தண்ணீர் வழங்குவதாகவும், புதிய போர்வெல் அமைத்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணுவதாகவும் தெரிவித்தனர். தண்ணீர் வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறிய மாணவியர்களை வலுக்கட்டாயமாக கலைந்து செல்ல வைத்தனர். அதன் பின்னர் மாணவியர்கள் விடுதி முன்பு சாலையில் அமர்ந்தும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் விடுதிக்கு கொண்டு வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மாணவியர்கள் போராட்டத்தை கைவிட்டு விடுதிக்குள் சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →