முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

போதிய நீரின்றி பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி காட்டுமன்னார்கோயில் பஸ் நிலையம் அருகே கடலூர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:20 AM
பகிர்:

போதிய நீரின்றி பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி காட்டுமன்னார்கோயில் பஸ் நிலையம் அருகே கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலையும், காட்டுமன்னார்கோயில் தாலுக்காவிலிருந்து காவிரி டெல்டா பாசன பகுதியிலிருந்து நீக்கப்பட்ட 38 கிராமங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக நிர்வாகிகள் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்து வட்டாட்சியர் தில்லைகோவிந்தனிடம் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.