தற்போதைய செய்திகள்

விலையில்லா லேப்டாப் கேட்டு ஆம்பூரில் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம்

ஆம்பூரில் விலையில்லா லேப்டாப் கேட்டு ஆம்பூரில் கல்லூரி மாணவர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம். அருண்குமார்

ஆம்பூரில் விலையில்லா லேப்டாப் கேட்டு ஆம்பூரில் கல்லூரி மாணவர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு லேப்டாப் வழங்கிய பிறகே மற்றவர்களுக்கு வழங்க வேண்டுமெனக் கோரி சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள்.  ஜனவரி மாதத்தில் வழங்கப்படுமென உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.  ஆனால் ஜனவரி மாதம் முடிந்த நிலையில் இதுவரை 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காததால் புதன்கிழமையன்று மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி கல்லூரி நுழைவு வாயிலில் நின்றனர்.  கல்லூரி முதல்வர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசிடமிருந்து லேப்டாப் வந்தபிறகு அவை வழங்கப்படுமென கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால் இன்று மீண்டும் வகுப்புக்களை புறக்கணித்துவிட்டு ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோடில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆம்பூர் டிஎஸ்பி விஜயகுமார், வட்டாட்சியர் கஸ்தூரி, கல்லூரி முதல்வர் பி.எம். ஆதில் அஹமத் ஆகியோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விலையில்லா லேப்டாப் வழங்க ஆவன செய்யப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT