முகப்பு
தற்போதைய செய்திகள்

குழந்தைகளிடம் புத்தக ஆர்வத்தை ஏற்படுத்த புதிய உத்தியை கையாள வேண்டும்: துணைவேந்தர்

தற்போது புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருவதால், குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த புதிய தொழில்நுட்ப யுக்தியை நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் கையாள வேண்டும் என அண்ணாமலைப்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:21 AM
பகிர்:

தற்போது புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருவதால், குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த புதிய தொழில்நுட்ப யுக்தியை நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் கையாள வேண்டும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கலையரங்கில் 9வது அரிமா புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் புத்தகக் கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியது: பெற்றோர்கள், குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போது கணினி, தொலைக்காட்சி உள்ளிட்ட விஷ்வல் மீடியா உள்ள உலகில் கொஞ்சமாவது புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும். இளைஞர்கள், பெரியோர்கள் என அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.

விழாவிற்கு அரிமா கவர்னர் ஆர்.எம்.சுவேதகுமார் தலைமை வகித்தார். கண்காட்சி குழுத் தலைவர் ஆர்.தர்பாரண்யன் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல முதல்வர் எஸ்.வேலுசாமி, அரிமா மூத்த தலைவர் கே.கணபதி, கண்காட்சி குழு செயலாளர் கே.சண்முகசுந்தரம், பொருளாளர் ஜே.திருமால்,  அரிமா சங்கத் தலைவர் ஜி. திலீப்குமார், செயலாளர் கே.ஸ்ரீதர், பொருளாளர் பி.எஸ்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்காட்சி குழு செயலாளர் கே.சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

புத்தக கண்காட்சியில் ஸ்ரீராமகிருஷ்ண மடம், லியோ புத்தக விற்பனையாளர்கள், மீனாட்சி புத்தக நிலையம், கோவை டிஜிட்டல் மீடியா, திருமூலர் இயற்கை அங்காடி, ராம்கா புத்தகங்கள், பாரதி புத்தகங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிப்புத்துறை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள், விற்பனையாளர்கள் பங்கேற்றுள்ளன. வார நாட்களில் மாலை 3 மணி முதல் 8.30 மணி வரையும்,  சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழ்மை ஆகிய இருதினங்களில் பகல் 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சி வருகிற பிப்ரவரி 17-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. தொடக்கநாளான வெள்ளிக்கிழமை அண்ணாமலைநகர் லீலா மெமோரியல் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.