ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் காங்கிரஸார் கறுப்புக்கொடி!
இலங்கை அதிபர் ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் மேலரதவீதியில் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அதிபர் ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் மேலரதவீதியில் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கறுப்புக் கொடியுடன், ராஜபட்சவேற்கு எதிராக கோஷமிட்டு மோட்டார் சைக்கிளில் நான்கு வீதிகளும் வலம் வந்தனர்.
இப்போராட்டத்தில் முன்னாள் சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த், முன்னாள் மாநில சேவாதள அமைப்பாளர் எம்.என்.விஜயசுந்தரம், நிர்வாகிகள் ராஜாசம்பத்குமார், அமிர்தலிங்கம், கட்டாரி சந்திரசேகரன், சந்துரு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்