கடலோர காவல் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீஸார்: ஏடிஜிபி சைலேந்திரபாபு
கடலூர் காவல் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்படும் என தமிழக கடலோர காவல் படை ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
கடலூர் காவல் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்படும் என தமிழக கடலோர காவல் படை ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையிலிருந்து கன்னியாக்குமரி வரை கடலோர காவல் படை சார்பில் ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையிலான குழுவினர் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். சைக்கிள் பயண பேரணி சனிக்கிழமை சிதம்பரம் நகருக்கு வருகை தந்தது. சிதம்பரம் வந்த சைக்கிள் பேரணியை ஏஎஸ்பி எம்.துரை, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் வரவேற்றனர்.
அப்போது ஏடிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடையே தெரிவித்தது: இந்தியாவிலேயே முன்மாதிரியாக தமிழக கடலோர காவல்படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடலுக்கு செல்லும் மீனவர்களை பாதுகாக்கும் வகையிலும், கடலில் வழி தவறி செல்லும் மீனவர்களை மீட்கவும் சிறப்பு கமாண்டோ படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் 1093 என்ற இலவச மொபைல் எண்ணை அழைத்தால் போதும், அவர்களை ஹெலிகாப்டர் அல்லது சிறிய படகுகள் மூலமாகவோ கமாண்டோ படைகள் சென்று மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சைலேந்திரபாபு தெரிவித்தார். பின்னர் ஏடிஜிபி தலைமையிலான விழிப்புணர்வு சைக்கிள் பயண பேரணி நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றது.