முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு வருஷாபிஷேகம்

கடந்த அக்க்ஷய ஆண்டு தை மாதம் 29-ம் நாள் (11-02-1987) வெகு விமரிசையாக 32 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது நான்கு கோபுரங்கள், தேவசபை, ராஜசபை (ஆயிரங்கால் மண்டபம்) ஆகியவற்றிற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு முன்பு 07-07-1955ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:28 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு சம்வத்ஸராபிஷேகம் (வருஷாபிஷேகம்) வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசி்த்தனர்.

கடந்த அக்க்ஷய ஆண்டு தை மாதம் 29-ம் நாள் (11-02-1987) வெகு விமரிசையாக 32 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது நான்கு கோபுரங்கள், தேவசபை, ராஜசபை (ஆயிரங்கால் மண்டபம்) ஆகியவற்றிற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு முன்பு 07-07-1955ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டும். வெள்ளி விழா நிறைவாகவும் 26-ம் ஆண்டின் துவக்கமாகவும் சம்வத்ஸராபிஷேகம் (வருஷாபிஷேகம்) நடைபெற்றது.

சாயரட்சை பூஜையில் 100-க்கும் மேற்பட்ட பொதுதீட்சிதர்கள் பங்கேற்ற ஸ்ரீகணபதி உபநிஷத், மஹான்யாசம், ஏகாதச ருத்ரம், சமகம் மந்திர ஜபம் செய்து வசோர்த்தாரா ஹோமம் உள்ளிட்ட விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் ஸ்படிக லிங்கமாக காட்சியளிக்கும் ஸ்ரீநடராஜமூர்த்திக்கு (ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு) பதினோரு வகையான அபிஷேகங்கள் செய்து விசேஷ மாலைகள், வஸ்திரங்கள் சாற்றி, பஞ்சமுக அர்சனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்க்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் அ.ஆனந்த தாண்டவ தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →