திருக்கோவிலூர் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
திருக்கோவிலூரில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருக்கோவிலூரில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருக்கோவிலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறிவிக்கப்பட்ட மின் தடை நேரங்களில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை தடைபடும் மின்சாரத்தால் தண்ணீரின்றி கரும்புப் பயிர்கள் கருகிப் போவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், கருகிப் போன கரும்பு பயிர்களோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோடு இணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் தலைமையில், மின் வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.