தற்போதைய செய்திகள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் நடத்துனர்கள் வேலை நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு

சென்னை பேருந்து நிலையத்தின் முன்பு, ஒரு மாநகரப் பேருந்து நடத்துனரை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அடித்ததால், அவர் பேருந்தை அப்படியே நிறுத்தினார். தொடர்ந்து,

பாலகிருஷ்ணன்

சென்னை பேருந்து நிலையத்தின் முன்பு, ஒரு மாநகரப் பேருந்து நடத்துனரை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அடித்ததால், அவர் பேருந்தை அப்படியே நிறுத்தினார். தொடர்ந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் செல்லும் அனைத்து பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

முன்னதாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் இருவரை ஒரு மாநகரப் பேருந்து உரசியபடி சென்றது. இதை அடுத்து அவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேருந்து நடத்துனரை இருவரும் அடித்ததாகத் தெரிகிறது. இதை அடுத்து, போவோர் வருவோர் எல்லாம் தங்களை அடித்து, காயப்படுத்தும் விதத்தில் பாதுகாப்பற்ற நிலையில் தாங்கள் பணி செய்வதா என்று கூறி, நடத்துனர்கள், ஓட்டுநர்கள் பேருந்துகளை அப்படி அப்படியே போட்டுவிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் குறுக்கும் நெடுக்குமாக அனைத்து வாகனங்களும் அணி வகுத்து நின்றன., இதனால் எழுந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆட்டோகள் கூட இயங்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணத்தால், பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். நடத்துனரை அடித்த இருவரும் பிடிபட்டுள்ள நிலையில், போலீஸார் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடு திரும்பும் சுபான்ஷு சுக்லா பிரதமருடன் விரைவில் சந்திப்பு!

இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி

பின்னலாடை நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம்

சிப்காட் வளாகத்தில் 25 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத 200 தொழிற்கூடங்கள்

அந்தியூரில் திருவிழாவுக்கு வந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT