தற்போதைய செய்திகள்

காதலர் தினம் : நாமக்கல் மலைக்கோட்டையில் குவிந்த காதல் ஜோடிகள்

காதலர் தினத்தையொட்டி ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்ததால் நாமக்கல் நகரின் மையத்திலுள்ள மலைக்கோட்டை காதல் கோட்டையாக காட்சியளித்தது.

தமிழ்ச்செல்வன்

காதலர் தினத்தையொட்டி ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்ததால் நாமக்கல் நகரின் மையத்திலுள்ள மலைக்கோட்டை காதல் கோட்டையாக காட்சியளித்தது. ஆண்டு முழுவதும் வந்து செல்லும் காதலர்கள் கோட்டையின் வரலாற்றுச் சிறப்பை உணராமல் மதில் சுவர்களில் பெயர்களை செதுக்குவதால் மலைக்கோட்டையின் சுவர்கள் சிதலமடைந்து வருகின்றன.

உலக காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி காதலர்கள் கோயில்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சந்தித்துக் கொள்வது வழக்கம். அதன்படி, தமிழகத்திலுள்ள 411 புரதான நினைவுச் சின்னங்களில் ஒன்றான நாமக்கல் மலைக்கோட்டையிலும் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர். இதுதவிர, புதுமண ஜோடிகளும் காதல் தினத்தை கொண்டாட மலைக்கோட்டைக்கு வந்திருந்தனர்.

இந்த காதல் ஜோடிகளை காண வழக்கத்துக்கு மாறாக இளைஞர் பட்டாளமும் மலைக்கோட்டையில் குவிந்தனர். அவர்களால் பிரச்னைகள் ஏற்பட்டுவிடாமல் தடுக்க தொல்லியல் துறை அலுவலர்கள் சிலரும் மலைக்கோட்டையின் மேல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT