முகப்பு
தற்போதைய செய்திகள்

நிதிமுறைகேடு: வெய்யலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம்

சிதம்பரம் அருகே உள்ள வெய்யலூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சாந்திஉலகநாதன். இவர் தானே கைப்பம்பு, விசைப்பம்பு, சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட  இனங்களில் நிதி முறைகேடு செய்துள்ளதாக புகார்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:28 AM
பகிர்:

நிதி முறைகேடு செய்ததாக சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட வெய்யலூர் ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்திரவிட்டுள்ளார்.

சிதம்பரம் அருகே உள்ள வெய்யலூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சாந்திஉலகநாதன். இவர் தானே கைப்பம்பு, விசைப்பம்பு, சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட  இனங்களில் நிதி முறைகேடு செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் விசாரணை மேற்கொண்டதில் நிதி முறைகேடு செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து சாந்தி உலகநாதனை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →