முகப்பு
தற்போதைய செய்திகள்

சங்கராபுரம் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த 6 யானைகள்: பொதுமக்கள் அச்சம்

சங்கராபுரம் அருகே புளியங்கோட்டை லக்கிநாயக்கன்பட்டி இடையே உள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, மக்காச்சோளம், நெல் ஆகிய பயிர்களின் ஊடே 3 குட்டி யானைகள் உள்பட 6 யானைகள் புகுந்துள்ளன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:29 AM
பகிர்:

சங்கராபுரம் அருகே புளியங்கோட்டை லக்கிநாயக்கன்பட்டி இடையே உள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, மக்காச்சோளம், நெல் ஆகிய பயிர்களின் ஊடே 3 குட்டி யானைகள் உள்பட 6 யானைகள் புகுந்துள்ளன.

செங்கம், தானிப்பாடி  பகுதியிலிருந்து கல்வராயன்மலையை ஒட்டி ஏற்கெனவே யானைகள் இங்கே வந்த அதே வழித்தடத்தில் இந்த யானைகளும் வந்துள்ளனவாம். உணவு, நீர் உள்ளிட்டவற்றுக்காக அவை மலைப் பகுதியில் இருந்து  வயல்பகுதிகளுக்கு வந்துள்ளன என்று கூறப்படுகிறது.

விவசாய நிலத்தில் யானைகள் தஞ்சம் புகுந்துள்ளதால் காவல்துறை வனத்துறை அதிகாரிகள் வந்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இங்கே இரு கிராம மக்களும் குழுமி, யானைகளை விரட்டும் முயற்சியில்  உள்ளனர். ஆனால், வாணவேடிக்கை உள்ளிட்டவைகளால் யானைகளைத் துரத்தக்கூடாது என்று மேலிட உத்தரவு இருப்பதால், அவை தானாகப் போய்விடுமா என்று அதிகாரிகளும் மக்களும் நின்றுகொண்டிருக்கின்றனர். யானைகளால் சேதமாகும் பயிர்களுக்காக நஷ்டத்தை அரசு தருமா என்று விவசாயிகள் அதிகாரிகளிடம் கேட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →