காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததற்கு ஜெயலலிதாவே காரணம்: விஜயகாந்த்
காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததற்கு ஜெயலலிதாவே காரணம் என்று பேசினார் தேமுதிக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததற்கு ஜெயலலிதாவே காரணம் என்று பேசினார் தேமுதிக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்.
திருக்கோவிலூர் அருகே வேம்பூர் ஊராட்சி கொட்டாமேடு கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி ராஜீவ்காந்தி-சத்யா ஆகியோர் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து விஜயகாந்த் பேசியபோது...
* தேர்தல் வாக்குறுதியில் கரும்பு டன்னுக்கு ரூ.2,500 வழங்குவதாகக் கூறப்பட்டது. ஆனால், கொடுத்த வாக்குறுதியை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை.
* தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்
* புதிதாக வரும் கட்சிகளே நாட்டை ஆளவேண்டும்.
* காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாததற்கு ஜெயலலிதாவே காரணம்
* எம்.ஜி.ஆர். கருணாநிதி ஆகியோரின் ஆட்சியில் காவிரிப் பிரச்னை இந்த அளவுக்கு வந்ததில்லை.
* நாடே லஞ்சத்தில் உழல்கிறது
* காவல்துறை நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்; காவல்துறை கடமையை மட்டுமே செய்ய வேண்டும்
* இலவசங்களைக் கொடுத்து டாஸ்மாக் பணத்தைப் பெற்று, மக்கள் பணத்தைச் சுரண்டுகிறது அரசு.
- இவ்வாறு பேசினார் விஜயகாந்த்.