முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சோடியம் தொழில்நுட்பம் வீனாக போகவில்லை: விஞ்ஞானி பிரபாத்குமார்

கல்பாக்கம் அனு மின்நிலையத்தில் 1700 கோடி செலவில் சோடியம் தொழில்நுட்பத்தில் மின்உற்பத்தி திட்டப்பணி நடைபெற்று வருகிறது. சோடியம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:34 AM
பகிர்:

கல்பாக்கம் அனு மின்நிலையத்தில் 1700 கோடி செலவில் சோடியம் தொழில்நுட்பத்தில் மின்உற்பத்தி திட்டப்பணி நடைபெற்று வருகிறது. சோடியம் பயன்பாடு வினாகப் போகவில்லை. 90 சதவீத பணி முடிவுற்றுள்ளது. விரைவில் அணு உலையானது முழுத்திறனுடன் இயக்கப்படும் போது சோடியம் தொழில்நுட்ப பயன்பாடு வெற்றி அளிக்கும் என கல்பாக்கம் அணுமின்நிலைய அணு விஞ்ஞானி முனைவர் பிரபாத்குமார் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பின்னர் அணுவிஞ்ஞானி முனைவர் பிரபாத்குமார் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இயந்திரவியல்துறை சார்பில் வியாழக்கிழமை பல்கலைக்கழக செனட் ஹாலில் நடைபெற்ற தாவர எரிபொருளும், அதன் செயல்பாடுகளும் என்ற தலைப்பிலான இருநாள் கருத்தரங்கு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

அவர் பேசியது: அணுசக்தி இன்றை தேவைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவின் ஆற்றில், தேவைகளை தமிழ்நாடு பல்வேறு வகையில் பூர்த்தி செய்கிறது. இந்தியா இயற்கை வளங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இன்றைய தேவைகளை பூர்த்தி செய்ய அணுசக்தி தொழில்நுட்பங்கள், அதன் மூலப்பொருள்கள் மிகவும் பயன்படுகிறது என பிரபாத்குமார் தெரிவித்தார்.

துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசுகையில் இன்றைய காலக்கட்டத்தில் அணுசக்தி போன்ற மாற்று எரிசக்தி தேவை முக்கியத்துவம் பெருவதாக தெரிவித்தார். பொறியியல் புல முதல்வர் எஸ்.வேலுசாமி, இயந்திரப் பொறியியல் துறைத்தலைவர் முனைவர் என்.கிருஷ்ணமோகன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.சிவப்பிரகாசம் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் வி.மணிஇனியன் அறிமுகவுரையாற்றினார். துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.செந்தில்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.