முகப்பு
தற்போதைய செய்திகள்

உள்ளூர் வியாபாரிகள் அடாவடி: திருக்கோவிலூரில் விவசாயிகள் சாலைமறியல்

திருக்கோவிலூர் அருகே உள்ளூர் வியாபாரிகளின் அடாவடி காரணமாக, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் திருக்கோவிலூர்  சாலையில் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:36 AM
பகிர்:

திருக்கோவிலூர் அருகே உள்ளூர் வியாபாரிகளின் அடாவடி காரணமாக, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் திருக்கோவிலூர்  சாலையில் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கே அண்மைக் காலமாக நெல், எள் உள்ளிட்டவற்றின் வரத்து மற்றும் மணிலா வரத்து அதிகரித்துள்ளது. நாள்தோறும் சுமார் 8 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யபட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்ற வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் ரூ.6,500க்கு ஏற்கப்பட்ட மணிலா ஒரு மூட்டைக்கு ரூ. 4,500 ஆகவும், ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட எள் ஒரு மூட்டைக்கு ரூ. 7 ஆயிரம் என்றும் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றனவாம்.

இதற்கு உள்ளூர் வியாபாரிகளின் அடாவடித்தனமே காரணம் என்று விவசாயிகள் கூறினர். உள்ளூர் வியாபாரிகள், வெளியூர் வியாபாரிகளை சந்தைக்குள் விடாமல் அவர்களை வெளியேற்றி விட்டு, தாங்களே கொள்முதலில் ஈடுபடுகின்றனராம். இவ்வாறு வேண்டுமென்றே பிரச்னை செய்து, விலையைக் குறைத்து கொள்முதல் செய்து வெளிச் சந்தையில் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனால், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அரகண்டநல்லூர் போலீஸார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →