செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே நடந்துச் சென்ற பெண்ணிடம் தாலி செயினைப் பறித்து தப்பியோடி கல்லூரி மாணவர்கள் 3 பேரை டோல்கேட் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே நடந்துச் சென்ற பெண்ணிடம் தாலி செயினைப் பறித்து தப்பியோடி கல்லூரி மாணவர்கள் 3 பேரை டோல்கேட் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
நேற்று இரவு டோல்கேட்டிலிருந்து சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை, அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் அடித்து உதைத்து, அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயினையும் பறித்துக் கொண்டு ஒடினர்.
பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் தாலி செயினை பறித்து ஒடிய 3 பேரையும் மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவர்களை பிடித்த போலீஸார் நடத்திய விசாரணையில் திருச்சி தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந் சண்முகசுந்தரம் மகன் தினேஷ் (19), ஸ்ரீரங்கம் கிழக்கு சித்திரைவீதியைச் சேர்ந்த ரமேஷ் (19). ஸ்ரீரங்கம் வசந்தநகரைச் சேர்ந்த கோபி் மகன் ஜெகதீசன் (19) என்பதும் இவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர் என்பது தெரியவந்தது. கல்லூரி மாணவர்கள் எதனால் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து மேலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.