முகப்பு
தற்போதைய செய்திகள்

கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 23 முதல் தொடக்கம்

பலத்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, நேர்முகத் தேர்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நேர்முகத் தேர்வு இப்போது வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் அந்தந்த மாவட்டத்தில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 23-ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இதுகுறித்து, தமிழக அரசு  வெளியிட்ட அறிவிப்பு:

பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள 3 ஆயிரத்து 607 உதவியாளர்  நிலையிலான பணியிடங்களை நிரப்பு கடந்த மாதம் 9-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது.தேர்ச்சி பெற்ற தேர்வாளர்களுக்கு கடந்த மாதம் 28-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு நாள் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது.

 பலத்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, நேர்முகத் தேர்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நேர்முகத் தேர்வு இப்போது வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தலைநகரங்களில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அழைப்புக் கடிதங்கள் சம்பந்தப்பட்டவர்களின் முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய தன் விவரக் குறிப்புகளை இதுவரை பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள்http:www.tncoopsrb.org என்ற இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.பதிவேற்றம் செய்த விவரங்களை, இரு நகல்கள் எடுத்து அவற்றில் தங்கள் புகைப்படங்களை ஒட்டி, அவற்றுடன் நேர்முகத் தேர்வுக்குத் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் (அசல் மற்றும் இரு நகல்கள்) எடுத்து வருமாறு தெரிவிக்கப்படுகிறார்கள்.

  மேலும், விவரங்கள் தேவைப்பட்டால் 044-24801034, 24801036 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →