சிறுநீரகம் மோசடி: 7 பேர் கைது
அடிப்படையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலி ஆவணங்களை கொடுத்து சிறுநீரக அறுவைமாற்று சிகிச்சை தரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் அரசு அதிகாரிகளின் கூட்டுசதியும் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வருவாய் ஆய்வாளர் சி.டி.ஸ்ரீகாந்த், மகாதேவா, கோபால், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை ஒப்பந்தப்பணியாளர் ராஜண்ணா, மஞ்சுநாத், ஆனந்த், வருவாய்துறை அலுவலர் ரஞ்சன் ஆகிய 7 பேரை
சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து ராமநகரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுபம் அகர்வால், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூர், ராமநகரம் மாவட்டங்களில் சிறுநீரக மோசடி நடைபெற்றுவருவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலி ஆவணங்களை கொடுத்து சிறுநீரக அறுவைமாற்று சிகிச்சை தரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் அரசு அதிகாரிகளின் கூட்டுசதியும் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வருவாய் ஆய்வாளர் சி.டி.ஸ்ரீகாந்த், மகாதேவா, கோபால், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை ஒப்பந்தப்பணியாளர் ராஜண்ணா, மஞ்சுநாத், ஆனந்த், வருவாய்துறை அலுவலர் ரஞ்சன் ஆகிய 7 பேரை கைது செய்துள்ளோம்.
சிறுநீரகத்தை ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்து, போலி ஆவணங்களை காண்பித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுநீரகக்கொடையாளர்களுக்கு விற்பனைத்தொகையில் 10-20 சதவிகித பணம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக 25 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்களை விரைவில் கைது செய்வோம் என்று கூறினார்.