முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லியில் போராட்டம்: மம்தா முடிவு

மேற்கு வங்க அரசு, ரூ. 2 லட்சம் கோடி கடன் சுமையால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், கடனுக்கான வட்டித் தொகையை செலுத்த 3 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று மம்தா கோரிக்கை விடுத்து வருகிறார். அது தொடர்பாக மத்திய அரசு எந்தவிதமான பதிலையும் தரவில்லை

தற்போதைய செய்திகள்

தில்லியில் போராட்டம்: மம்தா முடிவு

மேற்கு வங்க அரசு, ரூ. 2 லட்சம் கோடி கடன் சுமையால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், கடனுக்கான வட்டித் தொகையை செலுத்த 3 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று மம்தா கோரிக்கை விடுத்து வருகிறார். அது தொடர்பாக மத்திய அரசு எந்தவிதமான பதிலையும் தரவில்லை

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

கடனுக்கான வட்டியை செலுத்த கால அவகாசத்தை அளிக்காவிட்டால், மத்திய அரசுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்துவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க அரசு, ரூ. 2 லட்சம் கோடி கடன் சுமையால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், கடனுக்கான வட்டித் தொகையை செலுத்த 3 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று மம்தா கோரிக்கை விடுத்து வருகிறார். அது தொடர்பாக மத்திய அரசு எந்தவிதமான பதிலையும் தரவில்லை. சமீபத்தில் நடைபெற்ற இந்திய தேசிய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் பேசிய மம்தா, ""மேற்கு வங்கத்துக்கு உதவுங்கள். மேற்கு வங்கம் முன்னேறினால், நாடு முன்னேறும்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜங்கல்மஹால் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவதாவது ""நாங்கள் பொறுமையாக காத்திருக்கிறோம். எங்களது கோரிக்கைகளான, கடனுக்கான வட்டியை செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம், கடனை திருப்பிச் செலுத்தும் திட்டத்தில் மறுசீரமைப்பு ஆகியவை தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்துவோம்.முந்தைய மார்க்சிஸ்ட் அரசுக்கு, கடன் வாங்குவதில் எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்காத மத்திய அரசு, இப்போது எங்களுக்கு சலுகை அளிக்க மறுக்கிறது. இதை மேற்கு வங்க மக்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்'' என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →