ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 16.56 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் வெளியிட அனைத்துக்கட்சி பிரமுகர்களும் பெற்றுக்கொண்டனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் 8 லட்சத்து 29 ஆயிரத்து 312 ஆண்களும், 8 லட்சத்து 25 ஆயிரத்து 821 பெண்களும் இடம்பெற்றுள்ளனர். 42 திருநங்கைகளும் இடம்பெற்றுள்ளனர்.
தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்:
ஈரோடு கிழக்கு: ஆண்கள்-96,029 பேர், பெண்கள்-96,297 பேர், திருநங்கை-ஒருவர், மொத்தம்: 1 லட்சத்து 92 ஆயிரத்து 327 பேர். ஈரோடு மேற்கு: ஆண்கள்-1 லட்சத்து 10 ஆயிரத்து 778 பேர், பெண்கள்-1 லட்சத்து 10 ஆயிரத்து 138. திருநங்கைகள்-28, மொத்தம்: 2 லட்சத்து 21 ஆயிரத்து 327 பேர்.
மொடக்குறிச்சி: ஆண்கள்-1 லட்சத்து 2 ஆயிரத்து 578 பேர். பெண்கள்-1 லட்சத்து 4 ஆயிரத்து 989 பேர், திருநங்கைகள்-4 பேர், மொத்தம்: 2 லட்சத்து 7 ஆயிரத்து 571 பேர். பெருந்துறை: ஆண்கள்-96,841 பேர், பெண்கள்-97,063 பேர், மொத்தம்: 1 லட்சத்து 93 ஆயிரத்து 904 பேர்.
பவானி: ஆண்கள்-1 லட்சத்து 5 ஆயிரத்து 236 பேர், பெண்கள்-1 லட்சத்து 2 ஆயிரத்து 769 பேர், மொத்தம்: 2 லட்சத்து 8 ஆயிரத்து 5 பேர். அந்தியூர்: ஆண்கள்-94,962 பேர், பெண்கள்-92,357 பேர், திருநங்கை-ஒருவர், மொத்தம்: 1 லட்சத்து 87 ஆயிரத்து 320.
கோபிசெட்டிப்பாளையம்: ஆண்கள்-1 லட்சத்து 12 ஆயிரத்து 134 பேர், பெண்கள்-1 லட்சத்து 13 ஆயிரத்து 204 பேர், திருநங்கைகள்-3 பேர், மொத்தம்: 2 லட்சத்து 25 ஆயிரத்து 341 பேர். பவானிசாகர் தொகுதி (தனித்தொகுதி): ஆண்கள்-1 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர், பெண்கள்-1 லட்சத்து 9 ஆயிரத்து 4 பேர், தி
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வி.சி.நடராஜன் (திமுக), பாஜக மாநில பிரசார அணித் தலைவர் ஆ.சரவணன், மண்டலத் தலைவர் இரா.மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.