ஈரோடு மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் செவ்வாய்க்கிழமை களைகட்டியது.
விவசாயிகள் தங்களது மாடுகளை நீர்நிலைகளுக்கு எடுத்துச்சென்று குளிப்பாட்டினர். ஈரோடு காவிரி கரையில் நூற்றுக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டு குளிப்பாட்டப்பட்டன. பின்னர் அவற்றின் கொம்புகளில் வண்ண வண்ண நிறங்களில் வண்ணம் பூசினர்.
அதேபோல காலிங்கராயன் பாசன பகுதிகள் மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் நீர்நிலைகளிலும் ஏராளமான மாடுகளை விவசாயிகள் குளிப்பாட்டினர்.
அதைத் தொடர்ந்து மாடுகளுக்கு மாலை அணிவித்து அதற்கு பூஜை செய்தனர். ஒரு சில இடங்களில் விவசாயிகள் தங்களது வீடுகளில் உள்ள குதிரைககளையும் குளிப்பாட்டி மாலை அணிவித்து பூஜை செய்தனர். ஈரோடு நகர பகுதிகளைவிட, ஊரக பகுதிகளில் மாட்டுப்பொங்கல் களைகட்டியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.