முகப்பு
தற்போதைய செய்திகள்

வத்திராயிருப்பில் பள்ளிக்கு சென்ற ஆசிரியையை காணவில்லை என புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு பள்ளிக்கு வேலைக்குச் சென்ற பட்டதாரி ஆசிரியையை காணவில்லை என அவரது தாய் போலீஸில் புகார் செய்துள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:05 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு பள்ளிக்கு வேலைக்குச் சென்ற பட்டதாரி ஆசிரியையை காணவில்லை என அவரது தாய் போலீஸில் புகார் செய்துள்ளார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கு என உண்டு உறைவிடப் பள்ளி வத்திராயிருப்பில் செயல்பட்டு வருகிறது. இதனை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் நடத்துகிறார்கள். இவர்களுக்கு முழு செலவையும் அனைவருக்கும் கல்வி இயக்கம் கொடுத்து வருகிறது.

இந்த உண்டு உறைவிடப் பள்ளியில் நத்தம்பட்டி கீழூரைச் சேர்ந்த காமாட்சி மகள் காஞ்சனாதேவி என்ற பி.எஸ்ஸி., பி.எட்., படித்து முடித்தவர் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார்.

இம் மாதம் 12-ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையாம்.

இது குறித்து அவரது தாய் மீனா (55), நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் தலைமறைவான காஞ்சனாதேவியை தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →