முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் மூழ்கி மாணவன் பலி

மதுரை, திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை குளத்தில் மூழ்கி, ப்ளஸ் டூ மாணவர் பலியானார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:07 AM
பகிர்:

மதுரை, திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை குளத்தில் மூழ்கி, ப்ளஸ் டூ மாணவர் பலியானார்.

மதுரை பழங்கானத்தம் பகுதியைச் சேர்ந்தவர் போஸ் எனபவரின் மகன் வெங்கடேஷ் (17). ப்ளஸ் டூ மாணவரான இவர், தன் நண்பனான வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த கணேஷுடன் சரவணப் பொய்கையில் குளிப்பதற்காக வந்தவர்கள் குளத்தின் ஆழப் பகுதிக்குச் சென்றுவிட்டனர். அப்போது இருவரும் உயிருக்குப் போராடிய நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து, கணேஷை மட்டும் காப்பாற்றினர். வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.