முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளாவிற்கு கறிக்காக கொண்டு செல்லப்பட்ட 76 மாடுகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜோஷ் தங்கையா கவரப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஆந்திராவில் இருந்த கும்மிடிப்பூண்டி மார்கமாக சென்ற இரு லாரிகளை அவர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். இந்த சோதனையில் இரு லாரிகளில் இருந்த 76

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:09 AM
பகிர்:

ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு 2 லாரிகளில் கேரளாவிற்கு கறிக்காக வெட்டப்பட கொண்டு செல்லப்பட்ட 76 மாடுகள் கும்மிடிப்பூண்டி போலீஸார் ஜோஷ் தங்கையா பறிமுதல் செய்தார்.

கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜோஷ் தங்கையா கவரப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஆந்திராவில் இருந்த கும்மிடிப்பூண்டி மார்கமாக சென்ற இரு லாரிகளை அவர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். இந்த சோதனையில் இரு லாரிகளில் இருந்த 76 மாடுகளும் கேரளாவில் கறிக்காக வெட்டப்பட கொண்டு செல்லப்பட்ட விபரம் தெரியவந்தது. தொடர்ந்து இரு லாரிகளையும் அதில் இருந்த 76 மாடுகளையும் டி.எஸ்.பி ஜோஷ் தங்கையா கவரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தொடர்ந்து அந்த இரு லாரிகளில் இருந்த  ஓட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கருப்பசாமி(49), உடனிருந்த முருகன்(41), அதே புகுதியை சேர்ந்த இன்னொரு டிரைவரான மணி(37), உடனிருந்த திருமுருகன்(37) ஆகிய 4 பேர் மீதும் கவரப்பேட்டை போலீஸார் மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →