முகப்பு
தற்போதைய செய்திகள்

கவரப்பேட்டையில் வீடு புகுந்து 31 சவரன் நகை மற்றும்1கிலோ வெள்ளி கொள்ளை

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் தெருவில் வசித்து வருபவர் வஞ்சிமுத்து. தபால் துறை ஊழியரான இவருக்கு அமுதா(55) என்ற மனைவியும்,பிரபாகரன்(28),  மகேஷ்(25) என்ற இரு மகன்களும் உள்ளனர்.இரு தளங்கள் கொண்ட வஞ்சிமுத்துவின் வீட்டின் 2வது தளத்தில் பிரபாகரனின்

தற்போதைய செய்திகள்

கவரப்பேட்டையில் வீடு புகுந்து 31 சவரன் நகை மற்றும்1கிலோ வெள்ளி கொள்ளை

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் தெருவில் வசித்து வருபவர் வஞ்சிமுத்து. தபால் துறை ஊழியரான இவருக்கு அமுதா(55) என்ற மனைவியும்,பிரபாகரன்(28),  மகேஷ்(25) என்ற இரு மகன்களும் உள்ளனர்.இரு தளங்கள் கொண்ட வஞ்சிமுத்துவின் வீட்டின் 2வது தளத்தில் பிரபாகரனின்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:10 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் தபால் துறை ஊழியரான வஞ்சிமுத்து(60) என்பவரின் வீட்டில்  நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் வஞ்சிமுத்துவின் இரு மகன்கள் குடியிருந்த அறைகளின் பீரோவில் இருந்து 31 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் தெருவில் வசித்து வருபவர் வஞ்சிமுத்து. தபால் துறை ஊழியரான இவருக்கு அமுதா(55) என்ற மனைவியும்,பிரபாகரன்(28),  மகேஷ்(25) என்ற இரு மகன்களும் உள்ளனர்.இரு தளங்கள் கொண்ட வஞ்சிமுத்துவின் வீட்டின் 2வது தளத்தில் பிரபாகரனின் குடும்பமும், முதல் தளத்தில் மகேஷின் குடும்பமும் வசித்து வந்தனர். கீழ் தளத்தில் வஞ்சிமுத்து அவரது மனைவியுடன் வசித்து வருகிறார்.நேற்று (வியாழக்கிழமை) சென்னைக்கு உறவினரின் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் சென்று இரவு வீடு திரும்பிய வஞ்சிமுத்து மற்றும் குடும்பத்தார் கீழ் தளத்திலேயே படுத்து உறங்கினர். அப்போது அவரது பக்கத்து வீட்டு மாடி வழியே வஞ்சிமுத்துவின் வீட்டின் இரண்டாவது தளத்திற்கு நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வஞ்சிமுத்துவின் மூத்த மகன் பிராபகரன் தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 30 சவரன் நகை, 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடியுள்ளனர்.

தொடர்ந்து வஞ்சிமுத்துவின் இரண்டாவது மகன் மகேஷ் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பீரோவில்  1 சவரன் மோதிரம், 1 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்துச் சென்றனர்.இன்று(வெள்ளிக்கிழமை) காலை எழுந்த வஞ்சிமுத்து வீட்டில் இரு தளங்களிலும் கொள்ளையர்கள் நுழைந்து பணம் நகைகளை கொள்ளை அடித்ததை கண்டு அதிர்ந்து கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.தகவலறிந்த கவரப்பேட்டை போலீஸார் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →