7ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் - ஆதலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 7ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்...
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் - ஆதலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 7ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் பால்மோகன் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் நோட்டுப் புத்தகத்தில் டிரான்ஸ்லிட்ரேஷன் முறையில் ஆங்கில எழுத்துகளில் அவர் எழுதிய காதல் கடிதத்தை வகுப்பு ஆசிரியர் கண்டறிந்து, தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து அவரது பரிந்துரையின் பேரில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிவேலு ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.