தற்போதைய செய்திகள்

கடித்த பாம்புடன் மருத்துவமனை வந்த பெண்ணால் பரபரப்பு

மதுரை அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பாண்டியம்மாள் (45). கணவனை இழந்த பெண்மணியான இவர், இன்று

ஜெயப்பாண்டி

மதுரை அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பாண்டியம்மாள் (45). கணவனை இழந்த பெண்மணியான இவர், இன்று காலை வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது சுமார் 6 அடி நீள கட்டுவீரியன் பாம்பு இவரைக் கடித்ததாம். உடனே அந்தப் பாம்பை எடுத்து சுழற்றி தரையில் அடித்து, அரைகுறை உயிருடன் தூக்கிக் கொண்டு மதுரை அரசு பொதுமருத்துவமனைக்கு வந்துள்ளார். பாம்பைக் கையில் எடுத்துக் கொண்டு அவசரக் கோலத்தில் வரும் பெண்மணியைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்து, மருத்துவரின் மேஜையில் பாம்பைப் போட்டுவிட்டு, தனக்கு மருத்துவம் பார்க்குமாறு பாண்டியம்மாள் கூறவும், மருத்துவர்களுக்கு மயக்கம் வராத குறைதான்.

பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பாம்போ, நாயோ கடித்தால் அதனையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு வரத் தேவையில்லை என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT