சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்து ஆட்டை விழுங்கிய 15 அடி முதலை
சிதம்பரம் அருகே வியாழக்கிழமை காலை இளநாங்கூர் கிராமத்திற்குள் புகுந்து ஆட்டினை விழுங்கிய 15 அடி நீள முதலையை ஊர்மக்கள் பிடித்து கட்டிப்போட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிதம்பரம் அருகே வியாழக்கிழமை காலை இளநாங்கூர் கிராமத்திற்குள் புகுந்து ஆட்டினை விழுங்கிய 15 அடி நீள முதலையை ஊர்மக்கள் பிடித்து கட்டிப்போட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஐயப்பன் (40). வக்காரமாரி நீர்தேக்க குளத்திலிருந்து 15 அடி நீள முதலை ஒன்று புதன்கிழமை இரவு தப்பி வந்து இளநாங்கூர் கிராமத்தில் உள்ள இவரது வீட்டிற்கு அருகே வந்து ஆட்டுக்குட்டியை விழுங்கியுள்ளது.
நாய் குரைக்கும் சத்தம் கேட்டு ஐயப்பனும், அவரது தாயார் கற்பகவல்லியும் வந்து பார்த்த போது ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டு முதலை அருகே உள்ள வயலுக்கு சென்றதை பார்த்து இருவரும் சேர்ந்து போராடி கயிற்றால் முதலையை கட்டிப் போட்டனர். பின்னர் காலை ஊர்மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிதம்பரம் வனவர் மணி தலைமையில் வனத்துறையினர் சென்று முதலையை பிடித்து மீண்டும் வாக்காரமாரி நீர்தேக்க குளத்தில் கொண்டு விட்டனர். பிடிபட்ட முதலை 15 அடி நீளமும், 250 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement