டாஸ்மாக் கடையில் தகராறு செய்த 6 பேர் கைது
பழனி அருகே டாஸ்மாக் கடையில் தகராறு செய்த ஆறுபேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி அருகே டாஸ்மாக் கடையில் தகராறு செய்த ஆறுபேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி திண்டுக்கல் சாலையில் கணக்கன்பட்டியில் அரசு மதுபானக்கடை உள்ளது. இங்கு வேடசந்தூர் கூழக்காரப்பட்டியை சேர்ந்த நாகராஜ்(30), வேலுமணி ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு இங்கு மதுஅருந்த வந்த கோம்பைபட்டியை சேர்ந்த பொம்முராஜ்(28), மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த மயில்சாமி(28), செல்வம்(33), பழைய ஆயக்குடியை சேர்ந்த சூரியபிரகாஷ்(27), காளிப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(23) உள்ளிட்ட 6 பேர் கடையில் இருந்த தின்பண்டங்களை தட்டிவிட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் அங்கிருந்த சோடாபாட்டில்களை உடைத்து மிரட்டலும் விடுத்துள்ளனர். இதில் வேலுமணி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆயக்குடி போலீஸார் 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.