முகப்பு
தற்போதைய செய்திகள்

திவாகரன் உட்பட 8 பேரிடம் குற்றப்பத்திரிக்கை நகல் அளிப்பு

காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திவாகரன் உட்பட 8 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொண்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:39 PM
பகிர்:

காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திவாகரன் உட்பட 8 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான திவாகரன், பன்னீர்செல்வம், சிவராஜ், ஜெயபிரகாஷ், ரகு உட்பட 8 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது நீதிபதி (பொறுப்பு) சோமசுந்தரம் முன்னிலையில், 8 பேருக்கும் குற்றப்பத்திரிக்கையின் நகல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை வரும்18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, வழக்கு விசாரணை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →