முகப்பு
தற்போதைய செய்திகள்

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் ஏழைகளுக்கு உதவும் நிலையிலேயே உள்ளோம்: கருணாநிதி

முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்கக் காசுகள், ஏழை எளிய மக்கள் 3 ஆயிரம் பேருக்கு வேஷ்டி சேலைகள், மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கினார். அதன் பின்னர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:40 PM
பகிர்:

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் ஏழைகளுக்கு உதவ வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம் என்றார் கருணாநிதி.

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள தன் தாயார் அஞ்சுகத்தம்மாளின் சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் மு.கருணாநிதி. பின்னர் அவர், காட்டூரில் 10, 12ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்கக் காசுகள், ஏழை எளிய மக்கள் 3 ஆயிரம் பேருக்கு வேஷ்டி சேலைகள், மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கினார். அதன் பின்னர் பேசிய கருணாநிதி, நம் நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் ஏழை எளிய மக்களுக்கு இல்லாமை, இயலாமை, வறுமையை ஒழிக்க மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கிறோம்.

வறுமையை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எங்களைப் போன்ற எதிர்க் கட்சிகளும் ஏழை எளிய மக்களின் தேவை உணர்ந்து வழங்கி வருகிறோம் என்று கூறினார் கருணாநிதி.

இந்தக் கூட்டத்தில், டி.ஆர்.பாலு., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஏ.வ.வேலு, பொன்முடி, மதிவாணன், அழகு திருநாவுக்கரசு, நாகை எம்பி விஜயன், மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட திமுக தலைவர்களும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →