தற்போதைய செய்திகள்

தப்பிய கைதி மீண்டும் பிடிபட்டார்

தில்லி போலீஸ் காவலில் இருந்து தப்பிய கைதி செரவ் சர்மா (31) மீண்டும் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் பிகானிரைச் சேர்ந்தவரான செரவ் சர்மா, தேசிய பாதுகாப்பு அகாதெமி பயிற்சியின் போ

வெங்கடேசன்

தில்லி போலீஸ் காவலில் இருந்து தப்பிய கைதி செரவ் சர்மா (31) மீண்டும் கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் பிகானிரைச் சேர்ந்தவரான செரவ் சர்மா, தேசிய பாதுகாப்பு அகாதெமி பயிற்சியின் போது விபத்தில் சிக்கியதால் வெளியேற்றப்பட்டார். ஆள் கடத்தல் வழக்கில் அவருக்கு கடந்த 2007-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மற்றொரு வழக்கில் ஆஜார்படுத்த லக்னெவுக்கு ரயிலில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டார்.  விசாணைக்கு பிறகு தில்லி திரும்பும் போது, சார்பாக் ரயில் நிலையத்தில் செரவ் சர்மாவின் நண்பர்கள் பிரவீண் மிஸ்ரா, ஹிமான்ஸ் ஜேஸ்வால் ஆகியோர்  போலீஸ்காரர்களுக்கு மயக்க மருந்து கலந்த மோரை அளித்துள்ளனர். அவர்கள்  மயக்கமடைந்ததும், செரவ் சர்மா தப்ப உதவி செய்துள்ளனர். இதுதொடர்பாக அவரைத்  தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்நிலையில், செரவ் சர்மா, பிரவீண் மிஸ்ரா, ஹிமான்ஸ் ஜேஸ்வால் ஆகிய மூவரையும் பிரகதி மைதானம் அருகே தில்லி போலீஸர் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். போலீஸ் காவலிலிருந்து தப்பித்ததற்காக மீண்டும் ஒரு வழக்கு செரவ் குமார் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் எம்பிஏ பட்டதாரிகள். இவர்களுக்கு உத்தரபிரதேச கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த பஸ்லூ ரஹ்மான், பப்லு ஸ்ரீவத்ஸவ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று போலீஸர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT