முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி விவசாயம் படிப்பிற்கான கவுன்சிலிங் தொடங்கியது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கிய பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வில் (கவுன்சிலிங்) தகுதி

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:42 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கிய பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வில் (கவுன்சிலிங்) தகுதி அடிப்படையில் முதல் மூன்று இடங்களை மாணவ, மாணவியர்களுக்கு அனுமதி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. கவுன்சிலிங் ஜூலை 8-ம் தேதி தொடங்கி ஜூலை 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிபிடி, பி.பார்ம், பிஎஸ்சி நர்சிங், பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ஜூன் 7,8,9 தேதிகளில் தமிழகத்தில் 7 நகரங்களில் நடத்தப்பட்டது. மருத்துவப்படிப்புகளுக்கு 12,202 பேரும், பிஇ படிப்புகளுக்கு 3410 பேரும், பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு 6766 பேரும் தேர்வெழுதினர். அதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை 22.6.2013 அன்று பல்கலைக்கழக இணையதள முகவரி www.annamalaiuniversity.ac.in ல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகஅரசு இடஒதுக்கீட்டு விதி மற்றும் தரவரிசை அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும், பிஇ படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையும் நடைபெற்றது. ஜூலை 8-ம் தேதி திங்கள்கிழமை பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

முதல் நாள் கவுன்சிலிங்கில் தகுதி அடிப்படையில் சேலம் ஆத்தூரைச் சேர்ந்த அரவிந்தராஜ் ஆர்.அரவிந்தராஜ் (நுழைவுத்தேர்வு மதிப்பெண் -214), சிதம்பரம் ரபியா ரேபினா (நுழைவுத்தேர் மதிப்பெண் 206), திருப்பூர் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த எம்.ஜெயப்பிரியா (நுழைவுத்தேர்வு மதிப்பெண் 205) ஆகியோர் முதல் மூன்று ரேங்குகளை பெற்றனர். இவர்களுக்கு அனுமதி சேர்க்கைக்கான ஆணையை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், வேளாண் புல முதல்வர் ஆர்.எம்.கதிரேசன், முன்னாள் முதல்வர் ஜே.வசந்தகுமார், தோட்டக்கலைத்துறை தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்ததாவது: பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு 1500 பேரும் சேர்க்கப்படுவார்கள். இன்று தொடங்கி கவுன்சிலிங்கிற்கு 700 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  தொடர்ந்து 12-ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது. நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் தகுதி அடிப்படையிலும், அரசு  இடஒதுக்கீடு அடிப்படையிலும் கலந்தாய்வில் அனுமதி சேர்க்கை ஆணை வழங்கப்படுகிறது. கவுன்சிலிங்கில் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வருகிற ஜூலை 17-ம் தேதிக்குள் கட்டி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். ஜூலை 22-ம் தேதி முதல் பிஎஸ்சி வேளாண், தோட்டக்கலை படிப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படும். யாராவது அனுமதி சேர்க்கை வாங்கி தருவதாக கூறினால் நம்ப வேண்டாம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அனுமதி சேர்க்கை வாங்கி தருவதாக கூறி யாராவது கூறினால், அவரை பற்றி என்னிடம் தனியாக சந்தித்து புகார் தெரிவிக்கலாம் என நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →