முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலையில் பிஇ படிப்பிற்கு ஜூலை 15-ல் 2-ம் கட்ட கலந்தாய்வு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ படிப்பிற்கான கவுன்சிலிங் ஜூலை 3-ம் தேதி தொடங்கி ஜூலை 7-ம் தேதி முடிவுற்றது. இதில் 1437 பேருக்கு (பிஇ-அனைத்து பாடப்பிரிவுகளுக்கும்) அனுமதி சேர்க்கை ஆணை

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:42 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 15-ம் தேதி பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடைபெறுகிறது என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் (படம்) தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ படிப்பிற்கான கவுன்சிலிங் ஜூலை 3-ம் தேதி தொடங்கி ஜூலை 7-ம் தேதி முடிவுற்றது. இதில் 1437 பேருக்கு (பிஇ-அனைத்து பாடப்பிரிவுகளுக்கும்) அனுமதி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள் ஜூலை 12-ம் தேதிக்குள் சேர்க்கைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. முதல் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்க இயலாத மாணவ, மாணவியர்கள் நலன் கருதி, மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கும் விதமாக 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 15-ம் தேதி பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடைபெறுகிறது. பிஇ படிப்பிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற ஜூலை 22-ம் தேதி தொடங்கப்படும்.

கவுன்சிலிங்கில் எம்பிபிஎஸ் 150 இடங்களுக்கு 149 பேருக்கு அனுமதி சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. எஸ்டி வகுப்பினருக்கான ஒரு இடம் காலியாக உள்ளது. பிடிஎஸ் படிப்பிற்கான 100 இடங்களுக்கு 50 பேருக்கு அனுமதி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதம் 50 இடங்கள் உள்ளன. பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் தலா 100 இடங்களுக்கு 1 இடத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதம் 99 இடங்கள் காலியாக உள்ளன. பிபிடி (பேட்சுலர் ஆஃப் பிசியோதெரபி) படிப்பிற்கான 30 இடங்களுக்கு 1 இடத்திற்கு அனுமதி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதம் 29 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள மருத்துவப் படிப்பிற்கு 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார். அப்போது பதிவாளர் (பொறுப்பு) ந.பஞ்சநதம்,

முழு கட்டுரையைப் படிக்க →