முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:42 PM
பகிர்:

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

 அதன் ஒரு பகுதியாக இன்று முற்பகல் 11 மணிக்குப் பிறகு தூத்துக்குடிக்கு வந்தார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

காலை 8.30க்கு வந்து, சற்று ஓய்வு எடுத்து, பின்னர் 11 மணிக்கு அவர் கூட்ட மேடைக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இன்று காலை அவர் கிளம்பிய விமானத்தில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால், கிளம்பத் தாமதமானது. எனவே நேராக கூட்ட மேடைக்கே பிற்பகல் 11.10 மணி அளவில் வந்த ஸ்டாலின் தானே பேசினார். வேறு யாரும் மேடையில் பேசவில்லை.

அப்போது அவர், சேது சமுத்திரத் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லை என்றால், மேலும் இது போன்று போராட்டத்தை திமுகவினர் தீவிரப் படுத்துவார்கள் என்றும் கூறினார்.

பின்னர் அவர் 11.50 மணிக்கு கூட்டத்தில் இருந்து கிளம்பிச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.