தூத்துக்குடியில் சேது திட்டத்துக்கு பாடை கட்டிய மீனவர்கள்
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், தூத்துக்குடி கரையோர மீனவர்கள் அமைப்பினர் இன்று நூதனப் போராட்டம் நடத்தினர்
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், தூத்துக்குடி கரையோர மீனவர்கள் அமைப்பினர் இன்று நூதனப் போராட்டம் நடத்தினர். சேது சமுத்திரத் திட்டம் என்று பெயர் எழுதி, பாடை கட்டி, அதனை கடலில் விட்டுப் போராட்டம் நடத்தினர். கரையோரப் பகுதிகளில் கருப்புக் கொடி ஏந்திப் போராட்டம் நடத்திய அவர்கள், மீன்பிடிக்கச் செல்லும் படகுகளிலும் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.